மீண்டும் ‘டியூட்’ பட கூட்டணி.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜு?

இயக்குனர், நடிகர் என இரு துறைகளிலும் தடம் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளார்.
மீண்டும் ‘டியூட்’ பட கூட்டணி.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் மமிதா பைஜு?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டிராகன்’, ‘டியூட்’ போன்ற படங்களிலும் வசூலை குவித்து கவனம் ஈர்த்தார். இந்த படங்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்தன.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர், நடிகர் என இரு துறைகளிலும் தடம் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது துணை இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் இளம் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கதாநாயகன் உள்ளிட்ட பிற அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவெனில், பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு இதற்கு முன்பு ‘டியூட்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com