தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்..!

தனுஷின் 'வாத்தி' பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்துள்ளார்.
தனுஷ் பட இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான்..!
Published on

சென்னை,

தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'வாத்தி'. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் 'சார்' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 'வாத்தி' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனுஷின் 'வாத்தி' பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் நடிகர் துல்கர் சல்மான் இணைந்துள்ளார். இந்த படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும் படத்தை அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com