துல்கர் சல்மானின் “காந்தா” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

செல்வணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மானின் “காந்தா” படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு
Published on

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் கடைசியாக லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் "காந்தா" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது..இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்தது. 

இந்த நிலையில், காந்தா படத்தின் ரிலீஸை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அன்பும் மதிப்பும் மிக்க ரசிகர்களே... எங்களுடைய காந்தா திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானதிலிருந்து நீங்கள் கொடுத்து வரும் அன்பும் ஆதரவும் எங்களை நெகிழச் செய்துள்ளது. உங்களுக்குச் சிறந்ததொரு படைப்பாகக் காந்தாவை தர வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து இயங்கி வருகின்றோம்.

எங்களின் லோகா திரைப்படம், உங்களின் பலத்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம். மேலும், இதற்கு ஈடான இன்னொரு சிறந்த திரையனுபவமாகக் காந்தாவை வழங்க நாங்கள் உழைத்து வருகின்றோம்.இதற்காக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிக்கின்றோம். எனக் குறிப்பிட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com