துல்கர் சல்மானின் "காந்தா" பட டிரெய்லர் வெளியானது!


துல்கர் சல்மானின் காந்தா பட டிரெய்லர் வெளியானது!
x
தினத்தந்தி 6 Nov 2025 12:43 PM IST (Updated: 15 Nov 2025 1:52 PM IST)
t-max-icont-min-icon

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ நடித்துள்ள ‘காந்தா’ படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ‘காந்தா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 'மிஸ்டர் பச்சன்' திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே வெளியாக இருந்தது. ஆனால், அப்போது துலகர் சல்மான் தயாரித்த லோகா திரைப்படம் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருந்ததால் காந்தா படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், காந்தா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். இதில் துல்கர் சல்மானின் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1 More update

Next Story