தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது -தயாரிப்பு நிறுவனம்

தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது என படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது -தயாரிப்பு நிறுவனம்
Published on

சென்னை

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 7 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,

தர்பார் படத்தில் இருக்கும் குறிப்பிட்ட வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் அதன் இயக்குனர் மீது வழக்கு தொடரப்படும் என கூறி இருந்தார்.

இந்த நிலையில், லைகா நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால், நீக்கப்படுகிறது. தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல. பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது எனவும் லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com