

இந்த படத்தில் பிரசன்னா, சாம், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன், ரித்திகா சென், அஸ்வின் காக்குமனு மற்றும் பலர் நடித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிரடி சண்டை காட்சிகளும் படத்தில் இருக்கிறது. படம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வளர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் திரையுலகமே ஸ்தம்பித்துப்போன சூழலில், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளோடு தொடங்கப்பட்ட முதல் படம், இதுதான். 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி, முழு படத்தையும் முடித்து விட்டோம். படப்பிடிப்பின்போது எனக்கு பல சவால்கள் இருந்தன. கதை சம்பவங்கள் 2016-ம் ஆண்டில் நடப்பது போல் இருப்பதால், யார் முகத்திலும் மாஸ்க் போட்டு இருக்கக்கூடாது. கவனமாக பார்த்து பார்த்து படப்பிடிப்பை நடத்தினோம். படத்தில் ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கையாள்வதும் சவாலாகவே இருந்தது. தீபாவளி வெளியீடாக படத்தை திரைக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது.