இ-சிகரெட் பயன்பாடு: நடிகர் ரன்பீர் கபூருக்கு வந்த சிக்கல்

ஓடிடி ஷோவில் ரன்பீர் கபூர் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
E-cigarette use: Actor Ranbir Kabir in problem
Published on

மும்பை,

நெட்பிளிக்ஸ் ஷோவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக நடிகர் ரன்பீர் கபூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

ஆர்யன் கான் இயக்கும் ஓடிடி ஷோவில் நடிகர் ரன்பீர் கபூர் பங்கேற்று தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை எச்சரிக்கை வாசகம் ஏதுமின்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ரன்பீர் கபூர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com