சுற்றுச்சூழலை காப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது – ஷில்பா ஷெட்டி

நாம் சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது, என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்.

சுற்றுச்சூழலை காப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது – ஷில்பா ஷெட்டி
Published on

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்று நடிகை ஷில்பா ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், உடற்தகுதியும் ஆரோக்கியமும் என்பது தனிநபரின் வாழ்க்கையுடன் மட்டும் தொடர்புடையதல்ல என்றும், அது சுற்றுச்சூழலின் நலனுடனும் நேரடியாக இணைந்துள்ளது என்றும் கூறினார்.

“நமது பூமி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாமும் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது,” என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்.

மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க இப்போதிருந்தே அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அதற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “இந்த ஒரு விஷயத்தை அரசாங்கம் மட்டுமே நமக்காக முழுமையாகச் செய்து விட முடியாது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com