“ஈரப்பதம் காற்று மழை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

வெற்றி, கிஷன் தாஸ் இணைந்து நடித்துள்ள ‘ஈரப்பதம் காற்று மழை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“ஈரப்பதம் காற்று மழை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

புதுமுக இயக்குநர் சலீம் ஆர். பாட்ஷா இயக்கத்தில் உருவாகியுள்ள ஈரப்பதம் காற்று மழை திரைப்படம், மூன்று வெவ்வேறு மனநிலைகளில் இருக்கும் நபர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் மனோவியல் தளத்தில் புதிய முயற்சியாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் வெற்றி, கிஷன் தாஸ் இணைந்து நடித்துள்ளனர். வெற்றி, சுதர்ஷன் என்ற பாத்திரத்தில், மற்றவர்களின் கழுத்தில் செயின் காணும்போதெல்லாம் அதைப் பறிக்க வேண்டிய உந்துதலுடன் வாழும் மனநோயாளியாக நடிக்கிறார். கிஷன் தாஸ், கனி என்ற பாத்திரத்தில், நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடித்து வாழும் இளைஞராகக் காட்சியளிக்கிறார். தீப்தி ஓரின்டேலு, மேதினி என்ற பாத்திரத்தில், வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்ததால் உணர்வுகளை வெளிக்கொணராது வாழும் பெண்ணாக நடிக்கிறார். இந்த மூவரும் ஒரு கட்டத்தில் சந்திக்கையில், அவர்களின் உள்ளார்ந்த அவஸ்தைகள், அன்பு, வெறுப்பு, பயம், ஆவேசம் என அனைத்தும் வெடிக்கும் விதமாக கதை நகர்கிறது.

திரைப்படம் தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெற்றி, கிஷன் தாஸ் நடித்துள்ள ஈரப்பதம் காற்று மழை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com