’அந்த தயாரிப்பாளர் செய்ததை என்னால் தாங்க முடியவில்லை’...ஈஷா ரெப்பா

ஈஷா தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சந்தித்த சங்கடமான அனுபவத்தைப் பற்றி பேசினார்.
நடிகை ஈஷா ரெப்பா தற்போது நடித்துள்ள படம் ’ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி’. தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனால், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்வில் ஈசா ரெப்பா கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்திய ஒரு நேர்காணலின் போது, ஈஷா தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் சந்தித்த ஒரு சங்கடமான அனுபவத்தைப் பற்றி வெளிப்படையாக பேசினார்.
ஒரு படத்தின் தயாரிப்பாளர் தனது புகைப்படங்களை மடிக்கணினியில் பெரிதாக்கி, முழங்கைகள் கூட கருமையாகத் தெரிகிறது என்றும் இன்னும் வெண்மையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.
அந்த கருத்து ஆரம்பத்தில் தன்னை மிகவும் காயப்படுத்தி, மனச்சோர்வை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அதை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






