எதிர்பார்ப்புடன் சிம்புவின் "ஈஸ்வரன்" டீசர் வெளியானது

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் டீசர் வெளியானது.
எதிர்பார்ப்புடன் சிம்புவின் "ஈஸ்வரன்" டீசர் வெளியானது
Published on

சென்னை

"சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு, திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்து வந்தார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இன்று அதிகாலை 4.32 மணியளவில் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com