‘முன்னணி ஹீரோயின் ஆகப் போகிறார்’ - தன்யா மிட்டலுக்கு ஏக்தா கபூர் புகழாரம்

தன்யாவுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று ஏக்தா தெரிவித்துள்ளார்.
‘முன்னணி ஹீரோயின் ஆகப் போகிறார்’ - தன்யா மிட்டலுக்கு ஏக்தா கபூர் புகழாரம்
Published on

மும்பை,

இந்திய தொலைக்காட்சி உலகின் “டிவி குயின்” என அழைக்கப்படும் ஏக்தா கபூர், நடிகை தன்யா மிட்டல் மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இளம் நடிகையான தன்யாவுக்கு எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று ஏக்தா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஏக்தா கபூரை சந்தித்த தன்யா மிட்டல், அந்த சந்திப்பின் வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஏக்தா, “தன்யாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவர் ஒரு முன்னணி ஹீரோயினாக வர தயாராக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Also Read
’நான் சினிமாவிற்கு வர காரணமே விஜய்தான்’ - மாரி செல்வராஜ்
‘முன்னணி ஹீரோயின் ஆகப் போகிறார்’ - தன்யா மிட்டலுக்கு ஏக்தா கபூர் புகழாரம்

‘டிவி குயின்’ இவ்வாறு பாராட்டியதை கேட்ட தன்யா மிட்டல் மகிழ்ச்சியில் நெகிழ்ந்துள்ளார். ‘பிக் பாஸ்’ சீசன் 19 நிகழ்ச்சியில் (2025) போட்டியாளராக இருந்த தன்யாவுக்கு, நிகழ்ச்சிக்குள் இருந்தபோதே ஒரு வாய்ப்பை வழங்குவதாக ஏக்தா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com