பஞ்சாபின் அடையாளம் சோனு சூட்டுக்கு தேர்தல் கமிஷன் கவுரவம்

கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோனு சூட் செய்த உதவிகள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றன.
பஞ்சாபின் அடையாளம் சோனு சூட்டுக்கு தேர்தல் கமிஷன் கவுரவம்
Published on

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனு சூட். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோனு சூட் செய்த உதவிகள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றன. நடைபயணமாக சென்றவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை சிறப்பு விமானத்தில் அழைத்து வந்தார். வேலை இழந்து தவித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். இதையடுத்து சோனுசூட்டை பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜு தலைமை தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தார். அதனை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டு நடிகர் சோனுசூட் பஞ்சாபின் அடையாளம் என்று அறிவிப்பு வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு சோனுசூட் நன்றி தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com