தேர்தல் தோல்வி: நடிகை குஷ்பு கருத்து

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
தேர்தல் தோல்வி: நடிகை குஷ்பு கருத்து
Published on

காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இது குஷ்புவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து டுவிட்டரில் குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில், வெற்றி என்பது தோல்வியோடுதான் தொடங்குகிறது. மக்கள் தீர்ப்பை அடக்கத்தோடு ஏற்கிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன். அவர்களுடன் நிற்பேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அழகிய மாநிலமான தமிழ்நாட்டை மேலும் சிறப்பானதாக மாற்ற புதிய அரசுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்போம். அறிவாலயம் மீதும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவரது தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதைக்கு செல்லும் என்று நம்புகிறேன். தேர்தல்கள் வரும் போகும். நல்ல பணிகள் தொடர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com