'ஏழிசை மாளிகை'

'ஏழிசை மாளிகை'
Published on

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறையில் இருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் விடுதலைக்காக, லண்டன் கவுன்சிலுக்கு சென்று மேல்முறையீடு செய்ய அரிராம்சேட் முக்கியப் பங்காற்றினார்.

பாகவதர் விடுதலை பெற்றதும், தனது இசைக்குரு தங்குவதற்காக முக்கூடலில் ஒரு பங்களாவைக் கட்டினார்.

பாகவதர் செல்வாக்குடன் இருந்தபோது தங்கத் தட்டில் சாப்பிட்டவர். திருச்சியில் உள்ள அவரது பங்களாவுக்கு ஒரு முறை அரிராம்சேட்டும் அவருடைய மனைவி ருக்மணியம்மாவும் சென்றார்கள். அப்போது தங்கத் தட்டு, தங்கக் கிண்ணங்களில் அவர்களுக்கு உணவு பரிமாறி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பாகவதர் வசதியாக தங்கும் வகையில் பங்களாவை அரிராம்சேட் வடிவமைத்தார். தச்சர்களை அழைத்துக்கொண்டு செங்கோட்டைக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சென்று, யானைகள் உதவியுடன் வைரம்பாய்ந்த தேக்கு மரங்களை வெட்டிக் கொண்டுவந்து பயன்படுத்தினார்.

அந்த பங்ளாவிற்கு 'ஏழிசை மாளிகை' என்று பெயரிட்டு பாகவதரை தன்னுடனே தங்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கான வாய்ப்பு கடைசிவரை வாய்க்காமலே போனது. வழக்கிற்குப் பிறகு பாகவதருக்கு வருவாய் குறைந்துவிட்டது. தேவை ஏற்படும்போது அரிராம்சேட்டிடம் கடிதம் அனுப்பி பாகவதர் பணம் பெற்றிருக்கிறார். பாகவதரின் இறுதிக்காலம் வரை மாதம் ஐந்தாயிரம் ரூபாய் அரிராம்சேட் அனுப்பி வைத்திருக்கிறார். இது சேட்டின் கொடையுள்ளத்தை மட்டும் அல்ல, குருபக்தியையும் காட்டுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com