‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ வேற்று கிரகவாசிகளை பற்றிய படம்

வேற்று கிரகவாசிகள் பற்றிய ஒரு படம் தமிழில் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ வேற்று கிரகவாசிகளை பற்றிய படம்
Published on

கதாநாயகனாக ஆரி, என்ஜினீயர் வேடத்தில் நடித்து இருக்கிறார். சினிமா உலகில் பணிபுரிபவராக கதாநாயகி ஷாஷிவிபாலா வருகிறார். இவர்களுடன் பகவதி பெருமாள், நாகேசின் பேரன் பிஜெஷ் நாகேஷ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் டைரக்டர் யு.கவிராஜ் கூறியதாவது:-

வேற்று கிரகவாசிகள் சிலர் அவர்களுக்கு தேவையான ஒரு பொருளை தேடி பூமிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான பொருள் கிடைத்ததா, இல்லையா? அவர்களின் வருகை பூமியில் இருப்பவர்களை பாதிக்கிறதா, இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை. எல்லாம் மேலே இருக்குறவன் பாத்துப்பான் என்று சொல்வதில் உண்மை இருக்கிறதா, இல்லையா? என்பதற்கும் படத்தில் விடை சொல்லியிருக்கிறோம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சுற்றுவட்டாரங் களில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com