படப்பிடிப்பின்போது நேர்ந்த சோகம்..பிரபல உதவி இயக்குனர் காலமானார்


Emily paris assistant director dies 47 while filming italy
x

''எமிலி இன் பாரிஸ்'' வெப் தொடரின் 5-வது சீசனுக்கு டியோகோ பொரெல்லா உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.

வாஷ்ங்டன்,

மாரடைப்பு என்பது இப்போது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் வருகிறது . இந்தப் பிரச்சினை நம் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அனைவரையும் பாதித்து வருகிறது. சமீபத்தில், ஹாலிவுட் உதவி இயக்குனர் டியோகோ பொரெல்லா(47) படப்பிடிப்பு தளத்தில் காலமானார்.

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் எமிலி இன் பாரிஸ் (Emily in Paris) என்ற வெப் தொடரின் ஐந்தாவது சீசனுக்கு டியோகோ பொரெல்லா உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு இத்தாலியின் வெனிஸில் நடைபெற்று வந்தது.

கடந்த வியாழக்கிழமை நடந்த படப்பிடிப்பின்போது மாலை 7 மணியளவில் டியோகோ மாரடைப்பால் மயங்கி விழுந்தார், உடனடியாக படப்பிடிப்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

படப்பிடிப்பின்போது உதவி இயக்குனர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எமிலி இன் பாரிஸ் சீசன் -5 டிசம்பர் 18 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story