இனி சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம்: நல்ல கதை வந்தால் மட்டுமே நடிப்பேன் - டாப்சி

நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்து விட்டது என்று டாப்சி கூறினார்.
image courtecy:instagram@taapsee
image courtecy:instagram@taapsee
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் டாப்சி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்கவில்லை. ஆனாலும் மணக்கோலத்தில் இருவரும் இருந்த வீடியோக்கள் வைரலாகி திருமணம் நடந்ததை உறுதி செய்தன.

இந்த நிலையில் டாப்சி அளித்துள்ள பேட்டியில், "எனது வாழ்க்கையில் அதிக நாட்களை சினிமாக்களுக்காக செலவழித்து விட்டேன். 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் உழைத்த நாட்களும் உண்டு. நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் தற்போது வந்து விட்டது.

எனவே, இந்த கதையை விடவே கூடாது என்று நினைக்கும் அளவுக்கு நல்ல கதைகள் வந்தால் மட்டுமே இனி நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். சினிமா கெரியரை விட வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது. அந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். குடும்ப உறுப்பினர்கள், சினேகிதர்கள் உறவினர்கள் இடையே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com