சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் "எண்ட ஓமனே" ஆல்பம் பாடல் வெளியானது

இந்த ஆல்பம் பாடலில் கனா படத்தில் நடித்த தர்ஷன் நடித்துள்ளார்.
சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் "எண்ட ஓமனே" ஆல்பம் பாடல் வெளியானது
Published on

சென்னை,

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம் புதிய ஆல்பம் பாடலான "எண்ட ஓமனே" என்ற பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் கனா படத்தில் நடித்த தர்ஷன் மற்றும் மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் ஸ்ரீ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.கணேசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த ஆல்பம் பாடலை பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் பாடியுள்ளனர். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தினை ஆர்.கிஷோர் செய்துள்ளார். பாடலின் நடனத்தை அஸார் வடிவமைத்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையதளம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com