ஐரோப்பிய கார் பந்தயம்: நடிகர் அஜித் முதல் தகுதி சுற்றில் தேர்வு

நடிகர் அஜித்குமார் போர்ச்சுகலில் நடைபெறும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025-ல் கலந்துகொண்டு முதல் தகுதிச் சுற்றில் தேர்வாகியுள்ளார்.
ஐரோப்பிய கார் பந்தயம்: நடிகர் அஜித் முதல் தகுதி சுற்றில் தேர்வு
Published on

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் 'அஜித் குமார் ரேசிங் அணி' மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸில் பங்கேற்றுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.போட்டிக்கு முன்னர் 5 முறை நடைபெற்ற பயிற்சி சுற்றுகளில் இது அவரது தனிப்பட்ட சாதனை என்று அஜித்குமார் ரேசிங் குழுவின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

View this post on Instagram

பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கல் சென்றுள்ள நிலையில், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com