"உலகம் நம்மை பாராட்டாவிட்டாலும்..." - உருவக்கேலி செய்தவர்களுக்கு கத்ரீனா கைப் பதிலடி!

நடிகை கத்ரீனா கைப்பின் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உருவக்கேலிக்கு ஆளானார்.
கத்ரீனா கைப்
Published on: 

சென்னை,

விமர்சனங்களைக் கண்டு பயந்திருந்தால் முடங்கியிருப்பேன் என கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார்.

உருவக்கேலிக்கு எதிராக

நடிகை கத்ரீனா கைப்பின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உருவக்கேலிக்கு ஆளானார். இதற்கு எதிராக நடிகைகள் ரம்யா, குஷ்பு சுந்தர், திவ்யா ஸ்பந்தனா மற்றும் சமீரா ரெட்டி உள்ளிட்டோர் ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

“எனது முன்னேற்றம் தடைப்பட்டிருக்கும்!”

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்துள்ளார். விமர்சனங்களைக் கண்டு பயந்திருந்தால் முடங்கியிருப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கத்ரீனா கைப், “எனது உடல் தோற்றம் குறித்த கேலி விமர்சனங்களையும் எதிர்மறையான கருத்துகளையும் மனதில் கொண்டு எனது செயல்பாடுகளை மாற்றியிருந்தால், பயத்தால் முடங்கியிருப்பேன். வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போயிருக்கும்.

சில நேரங்களில் உலகம் நம்மைப் பாராட்டும். மற்ற நேரங்களில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமதிப்பை பாதிக்க அனுமதிக்க கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com