

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நிதி அகர்வால், தமிழில் ரவி மோகனுடன் 'பூமி' மற்றும் சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2 படங்களே நடித்த அவருக்கு தமிழ் ரசிகர்கள் சென்னையில் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நிதி அகர்வால், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தெரிவித்த கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன. ”சினிமாவில் விமர்சனங்கள் என்பது சாதாரணமான விஷயம்தான் என்றாலும் நடிகைகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே வருகிறது. பொத்தாம் பொதுவாக நடிகைகளை விமர்சிக்கும் மன நிலை பலருக்கும் இருக்கிறது. அது தவறு. இங்கு நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்குத் தான் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி சாதித்து வரும் நடிகைகளை எளிதில் யாரும் விமர்சித்து விட வேண்டாம். பாராட்டவில்லை என்றாலும், விமர்சிக்காமல் இருங்கள் போதும்”. என்றார்.