வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு

சினிமா துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக நயன்தாராவும் திரிஷாவும் உள்ளனர்.
வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு
Published on

 துபாய்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்து உரையாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நயன்தாராவும் திரிஷாவும் படகு ஒன்றில் ஒன்றாக அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். முஸ்தபா முஸ்தபா பாடலுடன் நயன்தாரா-திரிஷா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

சினிமா துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் திரிஷா இடையே பனிப்போர் நிலவி வருவதாக சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டாலும், தாங்கள் இருவரும் நல்ல நட்பிலேயே இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், வானுக்கும் எல்லை உண்டு… நட்புக்கு இல்லையே என்ற வரிகளுடன் அவர்கள் பதிவிட்டுள்ள இந்த பதிவு, 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை தற்போது வரை பெற்றுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com