எல்லோருக்கும் இதயம் லப்டப்னு துடிக்கும்; ஆனால் எனக்கு.. நடிகர் தனுஷின் அரசியல் பேச்சால் பரபரப்பு

எல்லோருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டிய ஒன்று... அறிய வேண்டிய ஒன்று... அரசியல்! என்று கூறினார்.


எல்லோருக்கும் இதயம் லப்டப்னு துடிக்கும்; ஆனால் எனக்கு.. நடிகர் தனுஷின் அரசியல் பேச்சால் பரபரப்பு
Published on: 

சென்னை

'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் 'ஓம்'. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இசை வெளியீடு

ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.

'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் அவரைச்சுற்றியுள்ள அரசியல் பேச்சுகளுக்கு நடிகர் தனுஷ் பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, நடிகர் தனுஷ் பேசும்போது, எல்லோருக்கும் இதயம் லப்டப்னு துடிக்கும். ஆனால் எனக்கு 'பேன்ஸ்... பேன்ஸ்...' என்றுதான் துடிக்கும்! என்றார்.

என்னை இயக்குவது

தொடர்ந்து அவர், இவரை அவர்கள் இயக்குகிறார்கள், இவர்கள் இயக்குகிறார்கள் என சமீபகாலமாக நிறைய பொய்யான விசயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. என் பக்கம் யாரும் இல்லை. என்னை இயக்குவது இறைவன் மட்டும்தான். என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை என்றார்.

டியூஷன் சென்டர்கள்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்க உள்ளோம். அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் டியூஷன் சென்டர்கள் திறக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும். எல்லோருக்கும் கண்டிப்பாக தெரிய வேண்டிய ஒன்று... அறிய வேண்டிய ஒன்று... அரசியல்! என்று கூறினார்.

நவம்பர் 20-ல் வெளியீடு

'ஓம்' திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X