மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது - இயக்குனர் சீனு ராமசாமி

மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ரமணா தயாரித்து, சுகிர்தன் கிறிஸ்து ராஜா மற்றும் ஜெனோசன் ஆகியோர் இயக்கியுள்ள புதிய படம், 'அந்தோணி'. கயல் வின்சென்ட், டி.ஜே.பானு, சுதர்ஷன், அருள்தாஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ள படம் விரைவில் திரைக்கு வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்க்கை பற்றிய கதை இது.

Also Read
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்
கோப்புப்படம்

சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீனு ராமசாமி கலந்துகொண்டு பேசும்போது, "இலங்கையில் ஒரு சினிமா எடுத்து, அந்த படத்தை இங்குள்ள தியேட்டர்களில் வினியோகிப்பது என்பது பெரிய விஷயம்.

Also Read
தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும் - ராமதாஸ்
கோப்புப்படம்

ஒரு நாடு போருக்கு பிறகு, சிதைந்த பிறகு, அந்த நாட்டில் வாழ்க்கை என்பது கேள்விக்குறிதான். குண்டு விழுந்த சத்தம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். எல்லா வகையிலும் அடக்குமுறையை சந்தித்து வரும் ஜனங்களின் குரல்தான் இந்த படம்.

Also Read
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: காதலி பேசாததால் மனவேதனையில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு
கோப்புப்படம்

எதையோ ஒன்றை மறைக்க, எதையோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கை என்றாகி விட்டது. மனித வாழ்க்கையில் எல்லாமே பணமாகிவிட்டது. பார்க்க வைக்கப்படும், கேட்க வைக்கப்படும் உலகத்தில் மக்கள் வாழ்கிறார்கள். நம்மை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டார்கள். அப்படிப்பட்ட உலகத்தில் இலங்கை தமிழ் மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக காட்சிப்படுத்தியிருப்பதை வாழ்த்துகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com