"தேர்வு முறைகேடு தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அதிகம்"- இயக்குனர் சற்குணம் பேச்சு

சற்குணம் இயக்கியுள்ள ‘எக்ஸாம்’ வெப் தொடர் மே 15ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
"தேர்வு முறைகேடு தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அதிகம்"- இயக்குனர் சற்குணம் பேச்சு
Published on

சென்னை,

பிரபல இயக்குனர் சற்குணத்தின் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘எக்ஸாம்’. இந்த தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற மே 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், எக்ஸாம் வெப் தொடரில் நிகழ்வில் இயக்குனர் சற்குணம் பேசுகையில், போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க சென்ற போது என்ன ஆனது என்பதே இந்த தொடரின் கதை. சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இந்த கதையை உருவாக்க காரணமாக இருந்தார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யக்கூடியவர்களின் பிரச்சினையை பேசியுள்ளோம்.

இதில் தவறு செய்திருக்கக் கூடிய அதிகாரிகள், பயிற்சி நிறுவனங்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை காண்பித்திருக்கிறோம் . இச்சம்பவங்கள் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் அதிகம் நடைபெறுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com