அதிகப்படியான வன்முறை காட்சிகள்... சலார் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...!

சமீபத்தில் சலார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதிகப்படியான வன்முறை காட்சிகள்... சலார் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு...!
Published on

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' தர சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com