சூர்யாவின் வாழ்த்தால் உற்சாகம்... ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி பதிவு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா இன்று வெளியாகிறது.

சூர்யாவின் வாழ்த்தால் உற்சாகம்... ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி பதிவு
Published on: 

சென்னை,

“ஒவ்வொரு வாய்ப்பிலும் என்னை மேலும் முயற்சி செய்து சிறப்பாக செயல்படுவதற்கான வலிமையையும், ஊக்கத்தையும் உங்கள் வார்த்தைகள் அளிக்கின்றன. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எனக்கு முக்கியமானது. லவ் யூ சார்” என்று ஜேசன் சஞ்சய் நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படித்துள்ளார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். சில குறும்படங்களையும் இயக்கியுள்ள அவர், தற்போது ‘சிக்மா’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் மீது வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கிடையே, ‘சிக்மா’ திரைப்படத்தை பார்த்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் படத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த ஜேசன் சஞ்சய்

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்..! சஞ்சய் இப்போது இயக்குனர் என்பதை நம்ப முடியவில்லை! நாளை பெரிய நாள். ஆல் தி வெரி பெஸ்ட் சஞ்சய்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்தீப்கிஷன்.. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிக்மாவின் நடிகர்கள் மற்றும் குழுவினர்களுக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ‘சிக்மா’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தெரிவித்ததற்கு மிக்க நன்றி சார். அவை எனக்கு உண்மையிலேயே மிகவும் முக்கியமானவை. ஒவ்வொரு வாய்ப்பிலும் என்னை மேலும் முயற்சி செய்து சிறப்பாக செயல்படுவதற்கான வலிமையையும், ஊக்கத்தையும் உங்கள் வார்த்தைகள் அளிக்கின்றன. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எனக்கு முக்கியமானது. லவ் யூ சார்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com