'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் - இணையத்தில் வைரலாகும்'சர்பிரா' படத்தின் டிரெய்லர்

அக்சய் குமார் நடித்துள்ள ‘சர்பிரா' படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் - இணையத்தில் வைரலாகும்‘சர்பிரா' படத்தின் டிரெய்லர்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தியாவின் வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

தற்போது, இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இந்தியில் 'சர்பிரா' என்ற பெயரில் ரீமேக் செய்து இருக்கிறார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ராதா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அடுத்த மாதம் 12-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com