“நடிப்பதற்கு கண்கள் போதும்” -நடிகை சாயிஷா

“அஜய்தேவ்கானுடன் நடித்த சிவாய் படம் வெற்றி பெற்றதால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து இப்போது ‘காப்பான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதுவரை உயர்ந்து இருக்கிறேன்.
“நடிப்பதற்கு கண்கள் போதும்” -நடிகை சாயிஷா
Published on

தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாயிஷா நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

அஜய்தேவ்கானுடன் நடித்த சிவாய் படம் வெற்றி பெற்றதால் அதிக பட வாய்ப்புகள் குவிந்து இப்போது காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதுவரை உயர்ந்து இருக்கிறேன். நடிப்பும் கற்கிறேன். நடிப்பதற்கு கண்கள் போதும். 2 கண்களில் எத்தகைய உணர்வுகளை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்.

அதற்கு பாஷையே தேவை இல்லை. நான் சினிமா குடும்ப பின்னணியில் வந்தவளாக இருந்தாலும் வீட்டில் சினிமா பற்றி பேசுவது குறைவுதான். எங்கள் எல்லோருக்கும் பயணம் செய்வது பிடிக்கும். தென்னக பட உலகம் தொழில்நுட்பத்தில் உயர்ந்து இருக்கிறது. காப்பான் படத்தில் நடித்தபோது அதை உணர்ந்தேன்.

சூர்யாவுடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்தது. அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் எதிர்காலத்துக்கு எனக்கு உதவும். பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள். ராம் லக்கன் இந்தி படத்தை ரீமேக் செய்தால் அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது.

நடனம் செய்ய நிறைய வாய்ப்பு உள்ள படம். நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர். முழு நடன திறமையையும் வெளிபடுத்தும் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் இவ்வாறு சாயிஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com