பா. ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படத்தில் நடிக்கும் பகத் பாசில்


பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் நடிக்கும் பகத் பாசில்
x
தினத்தந்தி 12 Dec 2024 10:28 AM IST (Updated: 29 March 2025 3:29 PM IST)
t-max-icont-min-icon

நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'வேட்டுவம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவின் முனனணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கவுள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உலக புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நடிகர் ஆர்யா வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story