'பென்ஸ்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

'பென்ஸ்' படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'பென்ஸ்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
Published on

சென்னை,

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பென்ஸ்'. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சமயத்தில் இப்படத்திலிருந்து மிக முக்கியமான ஒரு அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மலையாள நடிகர் நிவின் பாலி 'பென்ஸ்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதை படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நிவின் பாலி 'வால்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com