பிரபல நடிகரின் வீடு ஜப்தி...தவிக்கும் மனைவி


Famous actors house seized...wife in distress
x

மறைந்த நடிகர் ராஜசேகரின் வீட்டினை, ஹவுசிங் லோன் கட்டாததால் கோர்ட்டு ஜப்தி செய்துள்ளது.

சென்னை,

நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா குடியிருந்த வடபழனியில் உள்ள வீட்டினை, ஹவுசிங் லோன் கட்டாததால் கோர்ட்டு ஜப்தி செய்துள்ளது.

குழந்தை இல்லாமல் கணவரே உலகம் என்று வாழ்ந்து வந்த தாரா, 2019-ம் ஆண்டு ராஜசேகர் இறந்த பிறகு ஹவுசிங் லோன் கட்ட முடியாமல் தவித்து வந்திருக்கிறார்.

கணவன் இல்லாதநிலையில், ஆங்காங்கே இருந்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயன்றபோது, உதவி செய்ய வந்த சிலரும் அந்த பணத்தை ஏமாற்றி போய்விட்டதாகவும், இதனால் பணம் இல்லாமல் என்னசெய்வதென்றே தெரியாமலும் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், கோர்ட்டில் ஜப்தி ஆர்டர் கொடுக்கப்பட்டதால் இன்று காலை கோர்ட்டு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ராஜசேகர் மனைவி தாராவை வீட்டிலிருந்து வெளியேற்றினர்.

தமிழ் திரையுலகில் மதிக்கக்கூடிய இயக்குனரும், நடிகருமாக இருந்த ராஜசேகருக்காக கூட யாரும் தனக்கு உதவவில்லை என்று தாரா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story