ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த பிரபல நடிகை


ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த பிரபல நடிகை
x

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவுள்ள பென்ஸ் படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை 'ரெமோ' பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களை போல, 'பென்ஸ்' படமும் (லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்) எல்.சி.யூ-வில் இணைந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் இப்படத்தின் பூஜையுடன் துவங்கியது. அது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தனுஷின் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரபல நடிகை சம்யுக்தா மேனன், பென்ஸ் படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story