பிரபல நடிகை மாளவிகா அவினாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல நடிகை மாளவிகா அவினாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

பிரபல குணசித்திர நடிகை மாளவிகா அவினாஷ். இவர் மாதவனின் ஜே ஜே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய்யின் ஆதி, பைரவா, சூர்யாவின் ஆறு மற்றும் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். கன்னடத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பல மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய கே.ஜி.எப். முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்களிலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் மாளவிகா அவினாசுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெறும் தனது புகைப்படத்தையும் மாளவிகா அவினாஷ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "யாருக்கேனும் ஒற்றைத்தலைவலி பிரச்சினை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அதை சாதாரணமாக நினைத்தால் என்னைப்போல் ஆஸ்பத்திரியில் நீங்களும் இருக்க வேண்டிய நிலைமை வரும்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com