

சென்னை,
பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். ஐபிஎல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். ராதா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கிஷோர், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு ஐபிஎல் படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை அபிராமி, டிடிஎப் வாசனின் நடிப்பு குறித்து பேசியுள்ளார். அதாவது, டிடிஎப் வாசனை பார்த்தால் முதல் பட நடிகரை போல் தெரியவில்லை. அவர் சிறப்பாக நடித்துள்ளார். என்றார்.