தீபாவளிக்குள் காலி... பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்

தீபாவளிக்குள் கொல்லப்படுவாய் என பிரபல நடிகையான ஷெனாஸ் கில்லின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
தீபாவளிக்குள் காலி... பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்
Published on

புதுடெல்லி,

இந்தி திரையுலகில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருப்பவர் ஷெனாஸ் கில். இவரது தந்தை சந்தோக் சிங் சோக்கி கில். சமீபத்தில் சந்தோக் சிங்குக்கு தொலைபேசி வழியே அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஹேப்பி என அறிமுகம் செய்து கொண்டார்.

அதன்பின்னர், வருகிற தீபாவளி பண்டிகைக்குள் கொல்லப்படுவாய் என சிங்குக்கு அச்சுறுத்தல் விடுத்து உள்ளார். இதுபற்றி அமிர்தசரசில் உள்ள ஊரக காவல் துறையிடம் சந்தோக் சிங் புகார் அளித்து உள்ளார்.

நான் இந்து தலைவராக இருக்கிறேன் என்பதற்காக அவர்கள் என்னை கொல்ல பார்க்கின்றனர் என நினைக்கிறேன். இந்த விவகாரம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

போலீசார் கைது நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டால், பஞ்சாப்பை விட்டு வெளியேறி வேறிடத்தில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அவர் கூறியுள்ளார். இதுபற்றி எஸ்.பி. ஜஸ்வந்த் கவுர் கூறும்போது, சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

சந்தோக் சிங்குக்கு மிரட்டல் விடப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில், அவர் பா.ஜ.க.வில் சேர்ந்த பின்னர் 2 பேர் அவரை தாக்கி உள்ளனர். அவர் காரில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

இவரது மகளான ஷெனாஸ் கில், பிக் பாஸ் 13-ல் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர். அந்த சீசனில் பங்கேற்ற சித்தார்த் சுக்லா என்பவருடன் சேர்த்து சித்நாஸ் என்ற பெயராலேயே ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இறுதியில் அந்த நிகழ்ச்சியில் சித்தார்த் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். டாக்கா, கலா ஷா கலா ஆகிய படங்களிலும் ஷெனாஸ் கில் நடித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com