கோவிலுக்கு `ரோபோ' யானையை பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர்


Famous Bollywood actor gifts robot elephant to temple
x

கோவில்களில் யானைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதே இதன் நோக்கம் என்று சுனில் ஷெட்டி கூறினார்.

கர்நாடகா

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில், நடிகர் ஷாம் நடித்த 12பி என்ற படத்தில் நடித்து உள்ளார். இவர் தற்போது 'ஹண்டர் 2' என்ற ஆக்சன் திரில்லர் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற உமாமகேஸ்வரா வீரபத்ரேஷ்வரா கோவிலுக்கு `ரோபோ' யானையை பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பரிசளித்திருக்கிறார் .

`பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து இதனை செய்திருக்கும் சுனில் ஷெட்டி, கோவில்களில் யானைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதே இதன் நோக்கம் என்றார்.

1 More update

Next Story