பிரபல நகைச்சுவை நடிகர் திருமணம்

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த் - ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடந்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் திருமணம்
Published on

பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த். இவர் சென்னை 28, நட்பே துணை, மீசையை முறுக்கு, மெகந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சில பாடல்களையும் எழுதி உள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார். விக்னேஷ் காந்துக்கும் என்ஜினீயரிங் பட்டதாரியான ராஜாத்திக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில் விக்னேஷ் காந்த்- ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடந்தது.

திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார். திருமண புகைப்படத்தை வலைத்தளத்தில் விக்னேஷ் காந்த் வெளியிட்டு உள்ளார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com