பிரபல நகைச்சுவை நடிகர் சேசு மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சேசு மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் சேசு மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை,

தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேசு.இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சின்னத்திரையை தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் சேஷு விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com