டிராகன் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்கள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
டிராகன் படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்கள்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து, கிரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கவுரி கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரதீப் ரங்கநாதன், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 'டிராகன்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லியோன் ஜேம்ஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்களான விஜே சித்து, ஹர்ஷத் கான் இணைந்த்தை படக்குழு நேற்று அறிவித்தது. படத்தில் வி.ஜே. சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர், பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிகுமார் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு இன்று அறிவித்துள்ளது.படத்தில் மிஷ்கின் மயில்வாகனன் என்ற கதாபாத்திரத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் வேல் குமார் என்ற கதாபாத்திரத்திலும், கே. எஸ். ரவிகுமார் பரசுராம் என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com