பிரபல சினிமா படத்தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

பிரபல சினிமா தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல சினிமா படத்தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல் (அன்பே சிவம்), விஜய் (பகவதி) , சூர்யா (உன்னை நினைத்து) உள்ளிட்ட பலரின் படங்களைத் தயாரித்த நிறுவனம் 'லட்சுமி மூவி மேக்கர்ஸ்'. இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான முரளிதரன் சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்த தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தற்போது சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழில் கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த அவரது நிறுவனம் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம். அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com