பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி

நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த நடிகர் எரிக் டேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

'தி பாஸ்கெட்' படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் எரிக் டேன். எக்ஸ் மேன்: தி லாஸ்ட் ஸ்டான், கிரேஸ் அனாடமி, பேட் பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம்.

எரிக் டேன் கடந்த 2004-ம் ஆண்டு ரெபக்கா கேஹார்ட் என்பவரை திருமணம் செய்துகொண் டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அமிடிரோபிக் லேட்டரல் செலராசிஸ் (ஏ.எல்.எஸ்.) என்ற நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 53

எரிக் டேனின் மறைவு, ஹாலிவுட் திரையுலகம் தாண்டி உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'எரிக் டேன் மறைவு சினிமாவுக்கு பேரிழப்பு' என்று ஹாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com