

ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான எம்மி விருதுகளும் வாங்கி உள்ளார்.
நியூயார்க்கில் வசித்து வந்த ரான் லீப்மேனுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. மறைந்த ரான் லீப்மேன் ஏற்கனவே நடிகை லிண்டா லாவினை மணந்து விவாகரத்து செய்து விட்டார்.
பின்னர் ஜெசிக்கா வால்டரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ரான் லீப்மேன் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.