பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி

பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா கொரோனாவுக்கு பலியானார்.
பிரபல கன்னட நடிகர் கொரோனாவுக்கு பலி
Published on

பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா. இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாதேவப்பா நடித்த சங்கர் குரு, கவிரத்னா காளிதாசா, குரு பிரம்மா ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன் இணைந்து அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

மகாதேவப்பாவுக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மகாதேவப்பா உடல்நிலை மோசம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மகாதேவப்பாவுக்கு மனைவியும் மகனும் மகளும் உள்ளனர். அவரது மறைவுக்கு கன்னட நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com