தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மரணம்..திரையுலகினர் அதிர்ச்சி


Famous producer T.M. Jayamurugan dies of a heart attack
x

‘சிந்து பாத்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டி.எம் ஜெயமுருகன்..

சென்னை,

கடந்த 1995-ம் ஆண்டு வெளியான 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டி.எம் ஜெயமுருகன். அதனைத்தொடந்து, 1977-ம் ஆண்டு முரளி நடித்த 'ரோஜா மலரே' படத்தை இயக்கி தன்னை இயக்குனராகவும் அறிமுகம் செய்துகொண்டார்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற திரைப்படங்களை இயக்கியது மட்டுமன்றி இசையமைப்பளராகவும் இருந்தார். சில படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார். இவ்வாறு தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஜெயமுருகன், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் டி.எம் ஜெயமுருகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1 More update

Next Story