பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி

பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி.
பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி
Published on

மலையாள பட உலகில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் பூவாசல் காதர். இவர் இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன் இசையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.

கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் இவரது வரிகளில் பாடி இருக்கிறார்கள். பூவாசல் காதருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.

பாடகி சித்ரா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மலையாளத்தில் அழகான பாடல்களை தந்தவர் பூவாசல் காதர். எனது முதல் பாடலான விருது பெற்ற பாடல் உள்பட பல பாடல்களை எழுதி உள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com