மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்?


famous Telugu actor will join Mani Ratnams film?
x

மணிரத்னம் தற்போது கமல்ஹாசனை வைத்து ’தக் லைப்’ படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைப் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

இப்படத்தையடுத்து மணிரத்னம், ஒரு காதல் கதையை இயக்க இருப்பதாகவும் அதில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா , ஜாதி ரத்னலு , மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி இருப்பவர் நவீன் பொலிஷெட்டி.

1 More update

Next Story