'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்


ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல யூடியூபர்
x
தினத்தந்தி 11 July 2025 10:06 AM IST (Updated: 21 Aug 2025 1:06 PM IST)
t-max-icont-min-icon

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல 'ஜெயிலர் 2' படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 'ஜெயிலர் 2' படத்தில் பிரபலமான யூடியூபர் ஒருவர் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, யூடியூபில் படங்களுக்கு விமர்சனம் சொல்வதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கோடாங்கி ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதாக அவரே கூறியுள்ளார்.

1 More update

Next Story