பி.டி.எஸ் பாடகர் ஜின்னிடம் அத்துமீறிய ரசிகை...பாய்ந்த நடவடிக்கை


Fan kisses BTS singer Jin...a bold move!
x
தினத்தந்தி 2 March 2025 6:12 AM IST (Updated: 2 March 2025 6:54 AM IST)
t-max-icont-min-icon

பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சியோல்,

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்த சூழலில், தென் கொரியாவில் 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 18 மாத கட்டாயம் ராணுவ பயற்சி மேற்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு ஜின் இந்த ராணுவ பயிற்சியை முடித்தார். இதனையடுத்து, அவர் ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென அவர் பக்கத்தில் சென்று முத்தம் கொடுத்தார். இது தொடர்பாக மற்றொரு ரசிகை கிரிமினல் புகார் தொடர்ந்ததை அடுத்து, முத்தமிட்ட ரசிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அந்த பெண் யார் என்று தேடிய போது,அவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

1 More update

Next Story